திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
9/3/2025 12:45:27 PM
திருவள்ளூர், -திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சி கோட்ட பொறுப்பாளர் பா.பாஸ்கர், மாவட்ட தலைவர் ஜெ.லோகநாதன் ஆகியோர் ஒப்புதலுடன், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.சீனிவாசன் இதை வெளியிட்டுள்ளார். இதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர்களாக ஜெ.அபிலாஷ், டி.குணசேகர், வி.சந்திரசேகர், பொதுச் செயலாளர்களாக ஜி.புருஷோத்தமன், ஆர்.வினோத், செயலாளர்களாக எஸ்.கார்த்திக், பி.கிஷோர், என்.ஜி.பிரசாத், எம்.ராமு, பொருளாளராக எஸ்.பி.ராகேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.