பிரதமர் மோடி செல்லும் சூழலில் சீன போர் விமானம் திபெத்தில் திடீர் முகாம்
9/3/2025 12:45:02 PM
புதுடெல்லி, -இந்திய எல்லைக்கு அருகே திபெத் நிலப்பரப்பில் சீனா தனது சக்திவாய்ந்த போர் விமானத்தை திடீரென நிறுத்தி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இன்று வியட்நாம் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் சீனா சென்று அங்கு ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த சூழலில் சீனா தனது சக்தி வாய்ந்த போர் விமானம் ஒன்றை ரகசியமாக திபெத் பகுதியில் இந்திய எல்லைக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளது.அண்மையில், சீனாவையொட்டிய இந்திய எல்லையில் அதிக சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணைணை இந்தியா நிறுத்தியிருந்தது. இதற்கு சீன தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேச எல்லையையொட்டி திபெத்தின் தன்னாட்சி பகுதியாக கூறப்படும் டோஜங்யாடிங் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி. இங்குள்ள விமான தளத்தில், சீனா தனது சக்தி வாய்ந்த போர் விமானமான ஜே20 விமானத்தை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக இணையதளங்களில் வெளியிடப்பட்டதன் மூலம் பல்வேறு இணைய ஊடகங்களிலும் அது பரவியுள்ளது.வியட்நாம் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று சீனாவின் ஹேங்சூ நகருக்கு செல்கிறார். அங்கு 4, 5ம் தேதிகளில், நடைபெறும் ஜி-20நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.