பெண் பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு ஓராண்டு சிறை
9/3/2025 12:42:35 PM
திருப்போரூர், -பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (45). இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேளம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருஞானத்தை கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் விசாரணை நடத்தி, குற்றவாளி திருஞானத்துக்கு ஒரு வருட சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.