இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாழப்பாடி அருகே பயங்கரம் - விவசாயி, வாலிபர் அடித்து கொலை

9/3/2025 12:40:01 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

வாழப்பாடி, -வாழப்பாடி அருகே வெவ்வேறு இடங்களில் விவசாயி, வாலிபர் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜ்குமார் (23). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள கோயிலின் பின்புறமுள்ள வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவருடைய தலையில் கட்டையால் ஓங்கி அடித்ததுபோல் காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் தொடர்பில் வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்

கருமந்துறை அருகே தும்பல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இன்று காலை ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அங்கிருந்தவர்கள் ஏத்தாப்பூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் தும்பலை சேர்ந்த விவசாயி ராமசாமி (62) என்பது தெரியவந்தது.  அவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். 2வது மனைவி ஜெயகொடிக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு அவருடைய மகள் ஆனந்தசெல்வி வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டை விட்டு வெளியே சென்ற ராமசாமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பள்ளி அருகில் கிடந்தது தெரியவந்தது. சொத்து தகராறில் ராமசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் திடீர் தர்ணா



  • பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு - பைக் கொள்ளையர்களுக்கு வலை



  • கோயில் திருவிழாவில் போலீசுக்கு சரமாரி அடி - 2 பேர் கைது



  • பெண்கள் கூந்தல் அறுப்பு சைக்கோ வாலிபர் கைது



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய சென்னை பெண் கைது



  • ஸ்டான்லி மருத்துவமனை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தாலிசெயின் பறிப்பு



  • சிறுத்தையை கொன்றவர் கைது



  • வீட்டில் மது அருந்தியபோது தகராறு - தந்தை சரமாரி வெட்டிக்கொலை ; மகன்கள் ஓட்டம்; காஞ்சி. அருகே பயங்கரம்



  • மாணவியை தூக்கிச் சென்று கட்டிப்போட்டு பலாத்காரம் - கல்லூரி மாணவர் வெறிச்செயல்



  • அயனாவரம் ஜூவல்லரியில் 9 கிலோ தங்கம் கொள்ைள - புதுச்சேரி விடுதியில் மானேஜர் சுற்றிவளைப்பு ; சென்னை கொண்டுவரப்படுகிறார்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]