இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா - கருங்குருவிக்கு உபதேசம் செய்யும் திருவிளையாடல்

9/3/2025 12:38:33 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

மதுரை, -மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திரு விழாவில் இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்தல் திருவிளையாடல் நடந்தது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவில் சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்கள் நிகழ்த்தி காட்டப்படுகின்றன.  கடந்த ஆக.28ல் மீனாட்சி கோயிலில் இத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.இன்று காலை 9 மணியளவில் சுவாமியுடன் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் குலாலர் மண்டபத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளினர். `கருங்குருவிக்கு உபதேசம்’ நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 9 மணியளவில் சுந்தரேஸ்வரரின் ‘கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை’ நடந்தது. இரவு 7 மணியளவில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மவாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வருகின்றனர்.
கோயில் புலவர் கூறுகையில் ``முற்பிறவியில் புண்ணிய காரியங்கள் செய்த ஒருவர், சிறிது பாவமும் செய்ததால் மறுபிறப்பில் கருங்குருவியாக பிறந்தார். அந்த குருவியைக் காகங்கள் மிகவும் துன்புறுத்தின. காகங்களிடம் இருந்து தப்பிய குருவி, ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து, தன் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தது. அம்மரத்தின் கீழே இருந்த சிலர், மதுரையின் பெருமை மற்றும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என பேசிக் கொண்டிருந்தனர். உடனே மதுரைக்கு பறந்து வந்த குருவி, பொற்றாமரைக் குளத்திலே நீராடி இறைவனை வணங்கியது. இறைவனும் அக்குருவியின் பக்திக்கு இரங்கி, மரணத்தை வெல்லும், `மிருத்யுஞ்சய மந்திரத்தை’ உபதேசித்தார். இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று’’ என்றார்.

மேலும் சில
  • விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜி-தமிழ் பில்டர்ஸ் சார்பில் அன்னதானம்



  • ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்



  • நெல் அறுவடை செய்ய முடியவில்லை - வங்கிக்கடனும் கிடைக்கவில்லை விஷம் குடித்து விவசாயி தற்கொலை



  • புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார்



  • ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்து - ரயில் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாப சாவு ; காப்பாற்ற முயன்ற தாயின் கால் நசுங்கியது



  • அதிமுகவில் நிர்வாகிகள் களையெடுப்பு தொடர்கிறது - விருகம்பாக்கம் ஜெ. பேரவை தலைவர் திடீர் நீக்கம்



  • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - நக்மா பரபரப்பு பேட்டி



  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியாயமாக தேர்தல்: நீதிபதிகள் நம்பிக்கை



  • மேட்டூர் அணையை திறக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்



  • விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது வேன் கவிழ்ந்து 2 பேர் பலி



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]