இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி காவிரியில் மணல் குவாரிகள் - இந்திய கம்யூனிஸ்ட் எச்சரிக்கை

9/3/2025 12:36:54 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது


கரூர், -கரூர் மாவட்டம் சேமங்கி, தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில் புதிய மணல் குவாரி அமைத்துள்ளதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மற்றும் குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.பின்னர் மகேந்திரன் கூறியதாவது: சட்டவிதிகளுக்கு புறம்பாக மிகப்பெரிய மணல் கொள்ளை நடக்கிறது. தற்போது புதிதாக இந்த வட்டாரத்தில் காவிரியாற்றில் 4 மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழஙகியுள்ளது. இதனை எதிர்த்து இப்பகுதி மக்கள், நீரேற்று பாசன விவசாயிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் போராடி வருகின்றனர். தமிழக அரசு குவாரிகள் செயல்பட தடை விதிக்காவிட்டால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். புகழூர் வட்டாரத்தில் காகித ஆலை, சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் இந்த நீராதாரத்தை நம்பியுள்ளனர். ஏற்கனவே நொய்யல் ஆறு மாசடைந்து அந்த நீரை கொஞ்ச நஞ்சம் இருக்கும் காவிரியாற்று மணல்தான் சுத்திகரிக்கிறது. இதுவும் போய் விட்டால் குடிநீருக்கே பிரச்னை ஏற்படும். இப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த குவாரிகளை தடைசெய்ய தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் மிகக் கடுமையாக மக்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும். கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். தமிழக அரசால் உயர் அதிகாரிகளே டிஸ்மிஸ் செய்யப்பட்டதை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வர் மற்றும் தமிழக அரசின் பெயரை பயன்படுத்திதான் மணல் கொள்ளை நடக்கிறது.இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஏற்கனவே கோர்ட் உத்தரவின்மூலம் தாமிரபரணியில் மணல் கொள்ளையை தடுத்தார். நாங்களும் துணைபோகும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுப்போம். குவாரி லைசென்சை திரும்ப பெறும்வரை உண்ணாவிரதம் போன்ற பல தொடர் போராட்டங்களை நடத்துவோம்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையம் - திட்டத்தை கைவிட அதிகாரிகள் முடிவு? ; எச்சரிக்கை பலகையால் பரபரப்பு



  • வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மரியாதை



  • திருவொற்றியூர் அருகே குடிநீர் லாரி வராததால் மக்கள் மறியல்



  • கீழ்ப்பாக்கத்தில் வைர நகைகளுடன் பெண் மாயம்



  • அதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -  மத்திய அரசுக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • காவிரி வறண்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்து விநாயகர் சிலைகள் கரைப்பு



  • சூணாம்பேடு அருகே லாரி மோதி 2 பேர் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்



  • கும்மிடிப்பூண்டியில் மெஷினில் சிக்கி தொழிலாளி பலி - தொடரும் விபத்தால் பீதி



  • ‘மரியே வாழ்க.. மாதாவே வாழ்க’ கோஷம் விண்ணதிர வேளாங்கண்ணி தேர் பவனி கோலாகலம் - திருவிழா இன்று நிறைவு



  • விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் - இதயம் சென்னை பறந்தது



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]