இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நிதி பற்றாக்குறையால் தள்ளாடும்

9/3/2025 12:36:29 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது


காரைக்குடி, -தமிழகத்தில் 4,521 நூலகங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 110 நூலகங்கள் உள்ளன. நூலகங்கள், கல்வித்துறையில் உள்ள பொது நூலகத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இத்துறைக்கு என நிரந்தர இயக்குநர், இணை இயக்குநர் இல்லை. தவிர 16 மாவட்டங்களில் நிரந்தர மாவட்ட நூலக அலுவலர் நியமிக்கப்படாமல் உள்ளது.உள்ளாட்சி துறைகளில் வீட்டுவரியுடன் 10 சதவீதம் நூலக வரி சேர்த்து வசூல் செய்யப்படுவதே இத்துறைக்கான நிதி. இந்த நிதியைஅந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழு கணக்கில் உள்ளாட்சி நிர்வாகமே நேரடியாக செலுத்த வேண்டும். நூலக நிதியில் 25 சதவீதத்துக்கு தான் புதிய நூல்கள் வாங்க வேண்டும். ஆனால் 2009 முதல் 2013 வரை நூல்கள் வாங்காமல் 2013 டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு வரை 4 ஆண்டு கால நூல்கள் ஒரே ஆண்டில் வாங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரை முறையற்ற முறையில் நூல்கள் வாங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் நூலகத் துறை போதிய நிதியின்றி தள்ளாடி வருகிறது. அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு சென்று நூலக நிதி வசூல் செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.  தவிர அடிப்படை வசதியான மின்வசதி, குடிநீர், சேர் வாங்க மற்றும் கட்டிட பராமரிப்புக்கு நூலகர்களே பொதுமக்களிடம் நன்கொடையாக பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நூலகர்கள் புலம்பி வருகின்றனர்.
நூலகர்கள் கூறுகையில், ‘பஞ்சாயத்து நிர்வாகம் நேரடியாக பணத்தை நூலக நிதி கணக்கில் செலுத்த வேண்டும். நாங்கள் வசூல் செய்வதற்கான அதிகாரம் இல்லை. நாங்கள் சென்று பணம் கேட்டால் உங்களிடம் தர முடியாது கணக்கில் கட்டி விடுகிறோம் என கூறி அனுப்பி விடுகின்றனர். நன்கொடை என்ற பெயரில் அரசு பணியில் உள்ளவர்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளனர். புத்தகங்கள் அதிகமாக வாங்கிவிட்டு வைக்க ரேக், உரிய கட்டிட வசதி இல்லாததால் கரையான் அரிக்கும் நிலையில் உள்ளது. கரையான் அரிக்கும் புத்தகங்களுக்கு எங்கள் சம்பளத்தில் இருந்து பிடிக்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாமல் பல்வேறு நூலகங்கள் உள்ளன. மாதாந்திர கூட்டம் நடத்தி கோரிக்கைகளை கேட்பது இல்லை. நூலக நிதியை அரசு நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும். திட்ட ஒதுக்கீடு அடிப்படையில் நிதி ஒதுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் பேருந்து நிலையம் - திட்டத்தை கைவிட அதிகாரிகள் முடிவு? ; எச்சரிக்கை பலகையால் பரபரப்பு



  • வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மரியாதை



  • திருவொற்றியூர் அருகே குடிநீர் லாரி வராததால் மக்கள் மறியல்



  • கீழ்ப்பாக்கத்தில் வைர நகைகளுடன் பெண் மாயம்



  • அதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் -  மத்திய அரசுக்கு ராமதாஸ், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • காவிரி வறண்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்து விநாயகர் சிலைகள் கரைப்பு



  • சூணாம்பேடு அருகே லாரி மோதி 2 பேர் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்



  • கும்மிடிப்பூண்டியில் மெஷினில் சிக்கி தொழிலாளி பலி - தொடரும் விபத்தால் பீதி



  • ‘மரியே வாழ்க.. மாதாவே வாழ்க’ கோஷம் விண்ணதிர வேளாங்கண்ணி தேர் பவனி கோலாகலம் - திருவிழா இன்று நிறைவு



  • விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம் - இதயம் சென்னை பறந்தது



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]