பாஜ அரசு சாதனை விளக்க பிரசுரம் - பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
9/2/2025 4:58:10 PM
ஆவடி, -திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், மத்திய அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி அம்பத்தூரில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு மாவட்ட தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை வகித்தார். நகர தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வரதராஜபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட், சிடிஎச் சாலை உள்பட பல பகுதிகளில் வீடு, வீடாக சென்று, அங்குள்ள பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் பாஜ நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்எம்ஆர்.ஜானகிராமன், மாவட்ட துணை தலைவர் சென்னை சிவா, மாவட்ட பொருளாளர் தர், நிர்வாகிகள் தியாகராஜன், செந்தில்குமார், பத்மநாபன், நந்தகுமார், கிரேன், குப்புசாமி, கணேசன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.