கும்மிடிப்பூண்டி அருகே விபத்தில் ஊழியர் பலி
9/2/2025 4:57:28 PM
கும்மிடிப்பூண்டி, -கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (39). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றிரவு கும்மிடிப்பூண்டியில் இருந்து சிப்காட் வழியாக பைக்கில் வீடு திரும்பினார். பழம்பாளையம் அருகே சென்றபோது, அவர் பைக் மீது மினி வேன் மோதியது. படுகாயம் அடைந்த சுந்தரத்தை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரம் பரிதாபமாக பலியானார். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.