இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒன்டே 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

9/2/2025 4:52:07 PM
‘2,500 இடங்களில் வைக்கப்பட்டவை’ சென்னையில் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் மாலை விண்ணில் பாய்கிறது


லீட்ஸ்:  இங்கிலாந்து -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 4வது ஒருநாள் போட்டி நேற்று பகலிரவு ஆட்டமாக லீட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணியின் துவக்க வீரர்கள் ஷமிஅஸ்லாம் 24, சார்ஜல் கான் 16 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த பாபர் அசாம், சர்ப்ராஸ் அகமது தலா 12 ரன்னிலும் ஆட்டம் இழக்க ரிஸ்வான் 13 ரன்னில் வெளியேறினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் அசார் அலி 80 ரன் அடித்தார். 50 ஓவரில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழந்து 247 ரன் சேர்த்தது. இமாத் வாசிம் ஆட்டம் இழக்காமல் 57 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ரஷித் 3, ஜோர்டன், மொயின் அலி தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ராய் 14, ஹாலஸ் 8 ரன்னில் ஆட்டம் இழக்க ரூட் 30, கேப்டன் மோர்கன் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 72 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டோக்ஸ் 69, பேர்ஸ்டோவ் 61 ரன் எடுத்தனர். மொயின் அலி ஆட்டம் இழக்காமல் 45 ரன் அடித்தார். இதனால் 48 ஓவரில் 6 விக்கெட் இழந்து 252 ரன்  எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 4-0 என  இங்கிலாந்து முன்னிலை வகிக்க கடைசி போட்டி வரும் 4ம் தேதி நடக்கிறது.

மேலும் சில
  • கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ரியோ பாராலிம்பிக் தொடங்கியது



  • அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி



  • இங்கிலாந்துடன் டி.20 பாகிஸ்தான் சூப்பர் வெற்றி



  • யோகேஸ்வர் தத்துக்கு தங்க பதக்கம் இல்லை



  • மேக்ஸ்வெல் அதிரடியால் உலக சாதனை - ஆஸ்திரேலியா அபார வெற்றி



  • ரியோ பாராலிம்பிக் இன்று துவக்கம் - இந்தியாவில் ஒளிபரப்பு இல்லை



  • ஜோகோவிச், கெர்பர், வோஸ்னியாக்கி அரை இறுதிக்கு முன்னேற்றம்



  • உருகுவேவுக்கு எதிராக கோல் - சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார் மெஸ்ஸி



  • செரீனா வில்லியம்ஸ் சாதனை வெற்றி



  • விளையாட்டுத் துளிகள்....



Facebook

Twitter

தயாரிப்பாளர், இயக்குனர்களின் செக்ஸ் தொல்லை - பிரியங்கா ஜெயின்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]