குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
9/2/2025 4:50:26 PM
காதல், டிஷ்யூம், கூடல் நகர், யா யா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சந்தியா. ஐ.டி.யில் பணியாற்றும் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை கடந்த ஆண்டு மணந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் அவருக்கு குழந்ைத பிறக்கும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால் இம்மாதம் 27ம் தேதி அதாவது தனது பிறந்த நாளன்று குழந்தை பிறக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யுமாறும் டாக்டர்களிடம் சந்தியா கேட்டிருக்கிறாராம். அப்படி செய்வது கொஞ்சம் ரிஸ்க் என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் குழந்தை பிறக்க செய்ய வேண்டும் என்று சந்தியா பிடிவாதமாக இருக்கிறாராம்.