இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

முகுருசா, ரோனிக் அதிர்ச்சி தோல்வி: கெர்பர், வோஸ்னியாக்கி முன்னேற்றம்

9/1/2025 3:45:15 PM
புதிய நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வீடு அதிமுகவினர் முற்றுகை ; தலைமை அலுவலகத்திலும் போராட்டம், பணத்துக்கு பதவி என புகார் கரூர் இன்ஜினியரிங் மாணவி கொலை - கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் கார்பைன் முகுருசா, மிலாஸ் ரோனிக் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.
மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 3ம் நிலை வீராங்கனையுமான ஸ்பெயினை சேர்ந்த கார்பைன் முகுருசா, 48ம் நிலை வீராங்கனையான லாத்வியாவின் அன்ஸ்டஷிஜா செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில், 7-5, 6-4 என்ற செட் கணக்கில் முகுருசா தோல்வியடைந்தார். விம்பிள்டன் இறுதி போட்டியில் விளையாடியவரும், 5ம் நிலை வீரருமான கனடாவின் மிலாஸ் ரோனிக், ஆண்கள் ஒற்றையர் 2ம் சுற்றில், 6-7 (4-7), 7-5, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ரியான் ஹாரிஸனால் வீழ்த்தப்பட்டார். ரியான் ஹாரிஸன் உலகின் 120ம் நிலை வீரர். மிலாஸ் ரோனிக் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடியவர்களில் ஒருவராக கருதப்பட்டார். போட்டியின் போது, சுளுக்கால் அவதிப்பட்ட அவர், அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றின் மற்றொரு போட்டியில், டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி, 6-4, 6-4 என்ற கணக்கில் யு.எஸ்.ஓபன் முன்னாள் சாம்பியனும், 9ம் நிலை வீராங்கனையுமான ஸ்வெட்லனா குல்னெட்சோவாவை வீழ்த்தினார். யு.எஸ்.ஓபன் 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கரோலினா வோஸ்னியாக்கி பைனலுக்கு முன்னேறியுள்ளார்.

2ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், 6-2, 7-6 (9-7) என்ற கணக்கில், குரோஷியாவின் மிரஞ்சா லூயிக் பரோனியை வீழ்த்தி, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் கெர்பர், அமெரிக்காவை சேர்ந்த 17 வயதேயான சிசி பெல்லிஸை எதிர்கொள்கிறார். சுலோவாகியாவின் டொமினிகா சிபுல்கோவா, இத்தாலியின் ராபர்டா வின்சி, செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, சுவிட்சர்லாந்ன் பெனிடா பெனிக் ஆகியோரும் 3ம் சுற்றுக்கு முன்னேறினர்.
 ஆண்கள் ஒற்றையர் 2ம் சுற்றில், இங்கிலாந்தின் கைலே எட்மண்டு, 7-5, 6-4, 6-4 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் எர்னெஸ்டோ எஸ்கோபீடோவை வீழ்த்தி, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

நிலைகுலைந்த கோண்டா

இங்கிலாந்தை சேர்ந்த 13ம் நிலை வீராங்கனையான ஜோஹண்ணா கோண்டா, பல்கேரியாவின் பிரின்கோவாவை எதிர்கொண்டார். போட்டியின்போது மங்கலான பார்வை மற்றும் சுவாச கோளாறால் கோண்டா அவதிப்பட்டார். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய கோண்டா, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3ம் சுற்றுக்கு முன்னேறினார்.

3ம் சுற்றில் ஜோகோவிச்

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆண்கள் ஒற்றையர் 2ம் சுற்றில் செக் குடியரசின் ஜிரி வெஸ்லியை எதிர்கொள்ள இருந்தார். ஆனால் இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டிக்கு முன்னதாக ஜிரி வெஸ்லி விலகி கொண்டார். இதனால் போட்டியில் விளையாடாமலேயே, ஜோகோவிச் 3ம் சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் சில
  • பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒன்டே 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி



  • உருகுவேவுக்கு எதிராக கோல் - சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார் மெஸ்ஸி



  • செரீனா வில்லியம்ஸ் சாதனை வெற்றி



  • விளையாட்டுத் துளிகள்....



  • நெல்லையில் டிஎன்பிஎல் கிரிக்கெட்



  • 444 ரன் குவித்து இங்கி. உலக சாதனை - ஹாலஸ் அதிரடியில் பாகிஸ்தான் பஞ்சர்



  • வில்லியம்ஸ் சகோதரிகள், வாவ்ரிங்கா முன்னேற்றம்



  • ரஷ்ய வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்- யோகேஸ்வர் தத்தின் வெண்கல பதக்கம் வெள்ளியாக தரம் உயர்கிறது



  • யு.எஸ்.ஓபன் தொடங்கியது - ரபேல் நடால் முன்னேற்றம் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி



  • விடைபெற்றார் ‘தில்ஸ்கூப்’ தில்ஷன்



Facebook

Twitter

குழந்தை பிறக்கும் தேதி - சந்தியா பிடிவாதம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]