இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘தலையை வெட்டி வீசுவோம்’ காதல் ஜோடிக்கு மிரட்டல்

8/26/2016 2:34:38 PM
நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!


திருச்சி, -திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம்(20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார்.காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு ெதரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர். உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்.  தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன். இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர். இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிசாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு: கண்டித்த கணவரை மார்பில் குத்திய மனைவி கைது



  • இன்று ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு போட இலக்கு: தடுப்பூசி முகாம்களில் முதல்வர் ஆய்வு.!



  • வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்: திமுக உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு.!



  • ‘4 மாதங்களில் 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்’; சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல; சொல்லாததையும் செய்து கொடுத்துள்ளோம்.! எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி



  • சென்னையில் 35 இடங்களில் ஐடி ரெய்டு: 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.! ரூ.9 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்



  • அனைவரின் கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • தங்கம் விலை 2 நாளில் ரூ448 சரிவு



  • 5 ஆயிரம் இடங்களில் சோதனை: தமிழகம் முழுவதும் 870 ரவுடிகள் கைது: துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!



  • தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்: உத்தரவுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]