இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தலையங்கம்

சாகச விபரீதம்

8/8/2025 3:27:09 PM
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 95,131 கோடி: சுசில்குமார் மோடி தகவல் பணமதிப்பிழப்பால் பொருளாதார மந்தநிலை ஓராண்டுக்கு நீடிக்கும்: மன்மோகன் சிங் கணிப்பு

திருமண நாளைக் கொண்டாட, இந்தியாவைச் சேர்ந்த 36 வயது பெண் ஷில்பா அகர்வால், கணவருடன் தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள பாட்டாயா நகரக் கடற்கரையில், பாராசெய்லிங் செல்ல முடிவெடுத்தார். பாராசூட்டில் பறந்தபோது திடீரெனக் கீழேவிழுந்து ஷில்பா இறந்தார். திருமண நாள் சோகமயமானது.
பாராசெய்லிங் சாகச விளையாட்டு. எடுத்தவுடன் பாராசூட்டில் பறந்துவிட முடியாது. அதற்கான பயிற்சி தேவை. குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், துவக்க கட்ட வீரர்கள் பயிற்சி செய்யக்கூடாது. காற்றின் தன்மை, உபகரணங்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இதற்கு அவசியம்.
கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடந்த பாராசெய்லிங் நிகழ்ச்சியின்போது, தொழிலதிபர் மல்லேஸ்வரராவ் என்பவர், பெல்ட் கழன்று விழுந்து  பரிதாபமாக இறந்திருக்கிறார். இதுபோன்ற சாகச விளையாட்டுகள், இப்போது மாநகரங்களில் சர்வசாதாரணமாக நடத்தப்படுகின்றன. அனுமதி பெறுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எதுவும் இல்லாமலே, இவை நடத்தப்படுவதால், விபரீதங்களுக்கும் பஞ்சம் இல்லை.

சாகச விளையாட்டு வீரத்தையும், துணிச்சலையும் பறைசாற்றுவதாக இருக்கலாம். ஆனால், உயிரையே விலையாகக் கொடுக்க முடியுமா?
கோவையில் நடந்த நிகழ்ச்சியின்போது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. பாராசூட்டில் பறப்பதற்கு முன்பு, பெல்ட், கொக்கிகள் உள்ளிட்டவற்றைச் சரியாக அணிந்துள்ளனரா போன்ற அம்சங்கள் கூட சரியாகக் கண்காணிக்கப்படவில்லை.‘எனது மகன் அடுத்து பாராசெய்லிங் செல்வதாக இருந்தான். மல்லேஸ்வர ராவ் கொக்கி, பெல்ட் போன்றவற்றைச் சரியாக மாட்டுவதற்கு முன்பே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விசில் அடித்துவிட்டார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்’ என்று இந்த சோகத்தை நேரில் பார்த்த இக்பால் என்பவர் கூறுகிறார்.

ஆடி மாதம் காற்றுக்காலம். குறிப்பாக, கோவையில் ஆடி மாதத்தின்போது காற்று பலமாக வீசும். பாராசெய்லிங் மற்றும் பலூனிங் போன்ற சாகசங்களை நடத்துவதற்கு இது ஏற்ற மாதம் இல்லை. இதைக் கூட அறியாமல், எப்படி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது புரியாத புதிர்.
பாராசெய்லிங் போன்ற சாகச விளையாட்டுகள் தற்போது வணிகமயமாகிவருகின்றன. பாராசெய்லிங்குக்கென பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள், இந்தியாவில் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை.பாராசூட் என்பது உயிர்ப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் சாதனம். அதுவே உயிருக்கு எமனாக இனியும் அனுமதிக்கக்கூடாது.

மேலும் சில
  • இயல்பாக மலரட்டும்!



  • ‘மல்லையா’க்களை தப்பவிடலாமா?



  • வலைதளத்திலும் பொறி



  • திமிங்கிலங்களை கொன்றுவிடலாம்!



  • தகர்ந்த மருத்துவக்கல்வி கனவு



  • கண்ணீர் வற்றிய மலைவாழ் மக்கள்



  • மணமான பெண்களின் புகுந்த வீட்டு உரிமை



  • காவிரி வழக்கில் அதிர்ச்சி ‘வாதம்’



  • ரயில் பயணங்கள் இனிக்குமா?



  • அன்னப்பறவையாக இருங்கள்!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]