திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்
8/1/2025 4:03:20 PM
சென்னை, - திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக விவசாய அணி செயலாளராக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார். சமீபத்தில் மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.