மலேசியாவுக்கு கடத்த முயன்ற 50 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
7/29/2016 5:46:29 PM
மீனம்பாக்கம், -சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலயைத்தில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட தயாரானது. அதில், ஏற்றுவதற்காக வந்த சரக்கு பார்சல்களை சுங்க அதிகாரிகள் சோதித்தனர்.சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து மலேசியாவுக்கு அனுப்புவதற்காக வந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்ததால் திறந்து பார்த்தனர். அதில் 50 நட்சத்திர ஆமைகள் இருந்தது.பார்சலில் எழுதப்பட்டிருந்த முகவரியில் விசாரித்தபோது, போலியானது என்பது தெரிந்தது. பார்சல் மூலம் நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற கும்பல் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள், காவிரி டெல்டா மற்றும் சதுப்பு நில பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டவை என்பதும், அவைகளை வனத்துறையிடம் ஒப்படைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.