இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தகவல் சொல்லிவிட்டு காவல் உதவி மையத்தில் போலீஸ்காரர் தற்கொலை

7/29/2016 5:33:26 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

திருச்சி, -கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் குப்புசாமி. ஓய்வு போலீஸ் ஏட்டு. இவரது மகன் வெங்கட்ராமன் (43). ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலைகாவலர். இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் மணிரத்னம் (10). திருச்சி பிராட்டியூர் தீரன்நகர் விஸ்தரிப்பு வாஞ்சிநாதன் நகரில் வெங்கட்ராமன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.நேற்று மதியம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவல் உதவி மையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், வெங்கட்ராமன் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில், வெங்கட்ராமன் சென்னையில் பணிபுரிந்தபோது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறி, அவருடன் மனைவி அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதன்பின் வெங்கட்ராமன் திருச்சிக்கு பணிக்கு வந்தார். இங்கு வந்த பிறகும் வெங்கட்ராமனின் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கட்ராமன் பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது அவரது சட்டையில் ஜிகினா ஒட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மனைவி, வெங்கட்ராமனுடன் சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து மனைவி சந்தேகப்பட்டதால் மனவேதனையில் தவித்து வந்த வெங்கட்ராமன், விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
174 நடக்கப்போகுது

வெங்கட்ராமன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் சென்று, அம்மா மண்டபம் காவல் உதவி மைய பணிக்கு செல்வதற்காக ரைட்டரிடம் மைக் வாங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களிடம்  அனைவரும் நன்றாக வேலை பாருங்கள், நன்றாக இருங்கள் என சக போலீசாரிடம் கூறி கைகுலுக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த ஒரு போலீஸ்காரரிடம், இன்னைக்கு நம்ம லிமிட்டில் 174(தற்கொலை பிரிவு) ஒன்னு நடக்கப்போவுது, பாத்துக்குங்கள் என்று கூறிச் சென்றுள்ளார். இதை அவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அவர் தான் தற்கொலை செய்யப்போவதைத்தான் அப்படி கூறியிருக்கிறார் என நினைத்து போலீசார் வேதனையடைந்துள்ளனர்.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]