வீடுகளின் பூட்டை உடைத்து ₹3.20 லட்சம் கொள்ளை
7/29/2016 5:32:38 PM
திருவள்ளூர், -திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியம் (46). கூட்டுறவு வங்கி ஒன்றில் செயலாளர். நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றார். இரவு வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு 2.20 லட்சம். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்: காக்களூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (24). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், தனது தொழிற்சாலையில் பணிபுரியும் நண்பர்கள் 8 பேருடன் வசித்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல அனைவரும் வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 3 லேப்-டாப்கள், 5 செல்போன்கள் திருடு போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.