மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
7/29/2016 5:27:04 PM
மேட்டூர், -கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பெரிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர் மட்டம் மெல்லமெல்ல உயர்ந்து வருகிறது. நீர்மட்டம், இன்று காலை, 57.31 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 22.72 டிஎம்சியாக
உள்ளது.