இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மேட்டுப்பாளையம் அருகே10ம் வகுப்பு மாணவி கழுத்து நெரித்து கொலை - அண்ணன் கைது

7/29/2016 5:05:14 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

கோவை, -மேட்டுப்பாளையம் அருகே செல்போனில் ஆபாச படம் பார்த்ததை கண்டித்த 10ம் வகுப்பு மாணவியை அவரது அண்ணன் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்திபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் பத்ரசாமி. இவரது மகள் ஜெய்(16). அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் பள்ளி சென்ற அவரை காணவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மோத்திபாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள தோட்டத்தில் நிர்வாணமாக சிறுமி ஒருவர் பிணம் கிடப்பதாக  மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் இறந்து கிடந்தது காணாமல் போன ஜெய் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் தினேஷ்(22) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் ஜெயக்கு அண்ணன் முறை ஆவார். கடந்த வாரம் தினேஷ் தனது செல்போனில் ஆபாசபடம் பார்த்து கொண்டிருந்தார். இதை கவனித்த ஜெய தினேஷை கண்டித்ததுடன் பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், ஜெயகழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க சீருடையை கழற்றி தூக்கி வீசி எறிந்துள்ளார். மேலும் சிறுமியை நிர்வாணமாக அங்குள்ள தோட்டத்தில் மறைவான இடத்தில் வீசி சென்றது தெரியவந்தது. போலீசார் தினேஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



  • வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது



  • மதுரவாயல் பைபாஸ் சாலையில் வழிப்பறி செய்த 5 பேர் கைது



  • ஆசிரியையிடம் 8 பவுன் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை



  • ₹2 ேகாடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவியை கொன்ற ராணுவ வீரர் கைது



  • உடுமலை சங்கர் கொலை வழக்கு சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை



  • நர்சுக்கு பளார்; டாக்டர் கைது



  • மாதவரம் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]