இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா

7/29/2016 4:43:50 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சரும பராமரிப்பு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.  தோல் நோய்களை போக்குவதில், கஸ்தூரி மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இது, தோலுக்கு மென்மையை தருகிறது. தேங்காய் தோலுக்கு நன்மை தருகிறது. சோற்றுக் கற்றாழை, பாதாம் ஆகியவை தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தோல் ஆரோக்கியமாக இருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆளிவிதை பொடியுடன் சிறிது கசகசா, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தோலில் தடவினால் தோல் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும்.

கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் பொடியுடன், தேங்காய் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கை கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் தோல் பளபளப்பாக இருக்கும். பூஞ்சை காளான் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். சருமத்துக்கு பாதுகாப்பு தரும். வேர்குரு, கொப்புளங்கள், தோல் நோய்களுக்கு இது மருந்தாகிறது. கஸ்தூரி மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

தோல் ஆரோக்கியமாக இருக்க காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரோஜா பூவை பயன்படுத்தி முகப்பொலிவுக்கான மருந்து தயாரிக்கலாம்.ரோஜா பூவின் இதழ்களை பசையாக அரைத்து எடுக்கவும். சோற்றுக் கற்றாழையின் உள்ளே இருக்கும் சதையை எடுக்கவும். இரண்டையும் கலந்து முகத்துக்கு மேல்பூச்சாக போடவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் தோல் சுருக்கம் மறையும். சருமத்துக்கு பாதுகாப்பாக விளங்கும். முகத்துக்கு பொலிவை தரும்.ரோஜா பூ இதழ்களை அரைத்து சாறு எடுக்கவும். பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். இவைகளை நன்றாக கலக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் புத்துணர்வு கிடைக்கும். சருமம் ஆரோக்கியம் பெறும்.முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். சாதிக்காய் பொடியுடன், சந்தனப் பொடி சேர்க்கவும்.  இதில், எலுமிச்சை சாறு விட்டு கலந்து முகப்பரு மீது போட்டுவந்தால், பருக்கள் வடு இல்லாமல் மறையும். தோல் அழகு பெறும்.

மேலும் சில
  • புற்றுநோய் வராமல் தடுக்கும் கேரட்



  • நகத்துக்கு ஆரோக்கியம் தரும் சீமை அகத்தி



  • தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் செம்பருத்தி



  • சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்



  • சிறுநீர்பை கோளாறுகளை போக்கும் நெறிஞ்சில்



  • கண் எரிச்சலை போக்கும் கொத்தமல்லி



  • நரம்புகளை பலப்படுத்தும் பிரண்டை



  • உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி



  • வாந்தி, குமட்டலை போக்கும் எலுமிச்சை



  • கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]