வாலிபர் வெட்டிக்கொலை
7/29/2016 3:50:57 PM
கும்பகோணம், -கும்பகோணம் அருகே உள்ள மாத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரையன் என்கிற சின்னப்பிள்ளை. இவருக்கு 3 மகன்கள். இளையமகன்தினேஷ்(25) கூலிவேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்தனர்.இன்று அதிகாலை 2 மணிக்கு அவரது நண்பர்கள் 3 பேர் நரையன் வீட்டுக்கு வந்து தினேசை அழைத்து சென்றனர். பின்னர் தினேஷ் வீடு திரும்பவில்லை. இன்று காலை 7 மணி அளவில் தினேஷ் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நேரு நகரில் பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் சரமாரி வெட்டுக்காயங்கள் இருந்தது. தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.