இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வாகன ஓட்டிகளை மிரட்டி லஞ்சம் நடுரோட்டிலேயே போலீஸ் அராஜகம்

7/29/2016 3:41:51 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

திருவண்ணாமலை, -திருவண்ணாமலை- திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் நாள்தோறும்  லாரி, சரக்கு வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள்  போன்றவற்றால் போக்குவரத்து அதிகரித்துள்ளது.  இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக புகார் வந்தது. இதை தடுக்க`தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம் ஷிப்ட்’ முறையில் 24மணி நேரமும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் தலா ஒரு எஸ்ஐ தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு, வழிப்பறி குற்றங்கள் அல்லது வாகன விபத்து நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டியது இவர்களின் பணியாகும்.

மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளின் எல்லைக்குள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், லஞ்ச வேட்டையில் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை ஏந்தல் அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், அவ்வழியாக வந்த கனரக வாகனங்கள், லாரிகள், லோடு ஆட்டோக்கள் என அனைத்து வாகனங்களையும் திடீர் திடீரென வழிமறித்து லஞ்சம் வசூலித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
போலீசார் லஞ்சம் வசூலிப்பதை அறிந்த சில டிரைவர்கள் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றுவிட்டனர்.இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தங்களது கடமையை சரிவர செய்கிறார்களோ இல்லையோ, தினமும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வசூலிப்பதை மட்டும் தலையாய கடமையாக செய்து வருகின்றனர். சில டிரைவர்கள் போலீசார் லஞ்சம் வசூலிப்பதை பார்த்தால் வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. குற்றச்செயல்களை தடுக்க வேண்டிய போலீசாரே குற்றம் செய்ய தூண்டுவதுபோல் உள்ளது இச்செயல்’ என்று வேதனை தெரிவித்தனர். இவ்வாறு செயல்படும் லஞ்ச போலீசாருக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]