இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெல்லை அருகே இன்று அதிகாலை கோர விபத்து - லாரி-ஆம்னி வேன் மோதல்: 6 பேர் உடல் நசுங்கி பலிகுற்றாலம் சென்று விட்டு திரும்பிய போது சோகம்

7/28/2016 4:44:12 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஆலங்குளம், -நெல்லை அருகே இன்று அதிகாலை கன்டெய்னர் லாரியுடன் ஆம்னி வேன் நேருக்குநேர் மோதியதில் 6 பேர் உடல்நசுங்கி இறந்தனர். குற்றாலம் சென்று விட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த உலகநாதன், பாரதிநகர் ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரியை சேர்ந்த முத்தையா மகன் முருகன் அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகன்,  கடையனோடையைச்  சேர்ந்த சங்கர்பாஸ் (33). ஆறுமுகநேரி தனியார் நிறுவன காவலாளி முத்துக்கருப்பன் ஆகிய  6 பேரும் நண்பர்கள்.

இவர்களில் உலகநாதன் உப்பள கான்ட்ராக்டராக இருந்தார். ராதாகிருஷ்ணன் ஆம்னி பஸ் டிரைவராகவும், முத்தையா மகன் முருகன் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் ஆலையிலும் வேலை பார்த்து வந்தனர். நேற்று உலகநாதன் உள்ளிட்ட 6 பேரும் ஆம்னி வேனில் குற்றாலம் சென்றனர். அங்கு மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நன்றாக குளித்து மகிழ்ந்த அவர்கள், இன்று அதிகாலை 12.15 மணியளவில் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
காரை சங்கர்பாஸ் ஓட்டி வந்தார். ஒன்றரை மணியளவில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூர் அடுத்த வெள்ளான்குளம் விலக்கு அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு முந்திரி பருப்பு லோடு ஏற்றிய கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. 2 வாகனங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி கார்  நொறுங்கியது. மேலும் காரில் இருந்த உலகநாதன் உள்ளிட்ட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.

தகவல் அறிந்து ஆலங்குளம் டிஎஸ்பி சங்கு, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் சுப்புராஜ் என்பவர் காயமின்றி உயிர் தப்பினார். விபத்து தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து குறித்து கன்டெய்னர் லாரி டிரைவர் சுப்புராஜ் கூறும்போது, நான் தூத்துக்குடியில் இருந்து முந்திரி பருப்பு லோடு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தேன். சீதபற்பநல்லூர் அடுத்த வெள்ளான்குளம் விலக்கு அருகே வரும் போது எதிரே ஆம்னி கார் வேகமாக வந்தது. இதனைப்பார்த்த நான், லாரியை ஓரம் கட்டினேன். ஆனாலும் கார் வேகமாக வந்து லாரியுடன் நேருக்குநேர் மோதிவிட்டது என்றார்.

மரண ஓலம்

விபத்தில் 6 பேர் இறந்தது குறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிகாலையிலேயே பஸ் மற்றும் கார்களை பிடித்து திரண்டு வந்தனர். அவர்கள் உடல் வைக்கப்பட்டுள்ள மார்ச்சுவாரி முன்பு நின்று கதறி அழுதனர். இதனால் அதிகாலையிலேயே மருத்துவமனை வளாகத்தில் மரண ஓலமாக இருந்தது.

குளறுபடி ஏற்படுத்திய லைசென்ஸ்

விபத்தில் இறந்த சங்கர்பாசின் சட்டை பையில் அழகப்பன், தந்தை பெயர் ஆறுமுகநயினார், குலசேகரன்பட்டினம் என்ற முகவரியில் டிரைவிங் லைசென்ஸ் இருந்தது. இதனால் விபத்தில் இறந்தவர் அழகப்பனாக இருக்கலாம் எனக்கருதி போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே அழகப்பன் உயிரோடு இருப்பதும், அவரது டிரைவிங் லைசென்சை சங்கர்பாஸ் கொண்டு வந்திருப்பதும் தெரிய வந்தது.

மேலும் சில
  • மதுரையில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ் தீப்பிடித்து நாசம் 27 பயணிகள் உயிர் தப்பினர்



  • அதிரடி திட்டம் விரைவில் அமல் ஹெல்மெட் அணிந்தால் பெட்ரோல் இலவசம் இங்கில்லீங்க.. கேரளாவுலதான்



  • ரூ.55 கோடி ரூபாய் எங்கப்பா...?’ வங்கிக்கு பூட்டுப் போடும் மூதாட்டி திருப்பூர் அருகே பரபரப்பு



  • கூடுவாஞ்சேரி அருகே அரசமரத்தில் 5 தலை நாக உருவம் சாமி ஆடிய பெண்கள்



  • அப்துல்கலாம் பெயரிலான பூங்காவை இடித்து தள்ளிய அதிகாரிகள் காரணைப் புதுச்சேரியில் பரபரப்பு



  • கூடுவாஞ்சேரியில் ரவுடிகள் அராஜகம் பொதுமக்கள் அச்சம்



  • ஒரே நாளில் விபத்துகள் ரயில் மோதி 3 பேர் பலி போலீஸ் விசாரணை



  • அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது - விஜயகாந்த் அறிக்கை



  • ஓடும் ரயிலில் துணிகரம் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு - டிப்டாப் ஆசாமிக்கு வலைவீச்சு



  • மேட்டூரில் இருந்து திறக்கப்படும் ஆடிப்பெருக்கு தண்ணீர் குறைப்பு



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]