இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆவடி அருகே துணிகரம் - ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 22 சவரன் கொள்ளை

7/28/2016 4:42:54 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஆவடி, -ஆவடி அருகே ஆரிக்கம்பேடு, அன்பு நகர், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (45). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி மஞ்சுளா (35). இத்தம்பதிக்கு பிரசாந்த் (17) என்ற மகனும், சந்தியா (14) என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆடி கிருத்திகை விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் தெய்வசிகாமணி தனது குடும்பத்துடன் வீட்டுக்குத் திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தெய்வசிகாமணி குடும்பத்துடன் உள்ளே சென்று பார்த்தார்.அவரது வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் கீழே சிதறி கிடந்தன. மேலும், பீரோ லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 22 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் தெய்வசிகாமணி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து வந்து விசாரணை நடத்தினர்.மேலும், அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டு பீரோ மற்றும் கதவுகளில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.இச்சம்பவம் ஆரிக்கம்பேடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கணவன் - கும்பகோணம் அருகே பரபரப்பு



  • வீடு உடைத்து நகை கொள்ளை



  • வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய கணவர் கைது



  • மதுரவாயல் பைபாஸ் சாலையில் வழிப்பறி செய்த 5 பேர் கைது



  • ஆசிரியையிடம் 8 பவுன் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை



  • ₹2 ேகாடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவியை கொன்ற ராணுவ வீரர் கைது



  • உடுமலை சங்கர் கொலை வழக்கு சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை



  • நர்சுக்கு பளார்; டாக்டர் கைது



  • மாதவரம் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]