மாநிலங்களவை ஒத்திவைப்பு
7/28/2016 3:31:01 PM
புதுடெல்லி, - மானிய உதவிகளை பெற ஆதார் கார்டு அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.காஸ் மானியம், ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம் பெற ஆதார் எண் இணைப்பது அவசியம் என மத்திய அரசு அறிவித்தது. மாநிலங்களவையில் இன்று இப்பிரச்னை எழுப்பப்பட்டது. ஆதார் எண் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பிஜு ஜனதாதள உறுப்பினர்கள் பிரச்னை கிளப்பினர். இது குறித்து விவாதிக்க வேண்டுமென கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால் கடும் அமளி ஏற்பட்டது.
மக்களுக்கு ஆதார் கார்டு முழுமையாக கிடைக்காத நிலையில், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அமளி தொடர்ந்த நிலையில், மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.