பூட்டிய வீட்டில் நகைகள் கொள்ளை
7/28/2016 3:30:19 PM
கீழ்ப்பாக்கம்,-சென்னை நம்மாழ்வார்பேட்டை, சந்தியப்பன் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வி (52). இப்பகுதியில் நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டது. இரவு முழுவதும் கரன்ட் வராததால், தனது வீட்டு மொட்டை மாடியில் கலைச்செல்வி படுத்து தூங்கியுள்ளார். பின்னர் இன்று காலை கலைச்செல்வி எழுந்து கீழே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 5 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தலைமை செயலக காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.