கோலிவுட்டில் இடம் பிடிப்பாரா? ருக்மணிக்கு மற்றொரு சான்ஸ்
7/25/2016 5:11:15 PM
பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ மூலம் அறிமுகமானவர் ருக்மணி. பரதநாட்டியத் தில் தேர்ச்சி பெற்றவரான இவரது வரவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்ற ஆதரவு இல்லாததால் ஆரம்பமே சருக்கலானது. அடுத்து நடித்த ‘ஆனந்த தாண்டவம்’ படமும் கைகொடுக்கவில்லை. ‘கோச்சடையான்’ படத்தில் அனிமேஷன் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை.சினிமாவில் ஜொலிக்கலாம் என்ற நம்பிக்கையோடு வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் பழையபடி பரதநாட்டியத்தில் கவனம் செலுத்தியதுடன், விளம்பர படங்களுக்கு திரும்பினார்.
தற்போது மற்றொரு வாய்ப்பாக மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் அதிதி ராவ் ஹைத்ரி, ஷரத்தா நாத் என 2 நடிகைகள் நடிக்கும் நிலையில் ருக்மணியும் அவர்களோடு இணைந்திருக் கிறார். இந்த வாய்ப்பு தனக்கு கோலிவுட்டில் கைகொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருக் கிறார். மணிரத்னம் படத்தில் நடிப்பது பற்றி ேகட்டபோது, ‘அவர் படத்தில் நானும் நடிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பது பற்றி கூற மாட்டேன். படப்பிடிப்பிலும் பங்கேற்று நடிக்கத் தொடங்கி விட்டேன்’ என்றார் ருக்மணி.