என் கவர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது - ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
7/22/2016 5:26:16 PM
கிளாமர் காட்சிகளில் நடிக்க ஸ்ருதி ஹாசன் தயக்கம் காட்டுவதில்லை. இதனால் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறது. ‘டி டே’ இந்தி படத்தில் பெட் ரூம் சீனில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு டாப் லெஸ் அளவுக்கு படுகவர்ச்சியாக போஸ் அளித்த புகைப்படம் வெளியானது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ருதி கூறும்போது,‘எனக்கு இயற்கையாகவே கிளாமர் தோற்றம் உள்ளது. கவர்ந்திழுக்கக்கூடிய என் கட்டழகு மற்றவர்கள் கண்களை உறுத்துகிறது. சாதாரண உடை அணிந்திருந்தால் கூட எனது தோற்றம் கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். ஒருபோதும் நான் எல்லை மீற மாட்டேன்’ என்றார்.