எம்ஜிஆர் பாடல் ரீமிக்ஸில் லாரன்ஸ் - நிக்கி
7/22/2016 5:25:53 PM
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...’ பிரபல பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகர்களுடன் பிரகாஷ் நடனம் ஆடி நடித்திருந்தார். அப்பாடல் காட்சி எடுபடவில்லை. தற்போது எம்.ஜி.ஆரின் மற்றொரு பிரபல பாடல் ரீமேக் ஆகி உள்ளது.ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ‘மொட்டா சிவா கெட்ட சிவா’. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். ‘குடியிருந்த கோயில்’ படத்தில், ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்...’ பாடல் ஆல் டைம் சூப்பர் ஹிட் பாடல். எம்ஜிஆர், எல்.வரலட்சுமி இப்பாடலுக்கு நடனம் ஆடி இருந்தனர். அப்பாடலை தனது புதிய படத்துக்காக ரீமிக்ஸ் செய்திருக்கிறார் லாரன்ஸ். இப்பாடலுக்கு லாரன்ஸுடன் நிக்கி கல்ராணி நடனம் ஆடுகிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் இப்பாடல் காட்சியை படமாக்கினார் இயக்குனர் சாய் ரமணி. அமரேஷ் கணேஷ் இசை அமைத்திருக்கிறார்.