இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிராவில் உட்கட்சி பூசல்: காங். அதிருப்தியாளர்களுக்கு ராகுல் கடும் எச்சரிக்கை

7/10/2025 2:57:23 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உட்கட்சி பூசலில்  ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பாஜ- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு  விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜ கூட்டணியில் சிவசேனா முரண்டு பிடித்து வருகிறது. இந்நிலையில், பாஜவும், சிவசேனாவும்  தனித்தனியாக போட்டியிட்டால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டுமென கட்சி மேலிடம் எதிர்பார்க்கிறது. ஆனால்,  தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. மாநில பொது செயலாளர் குருதாஸ் காமத்  தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி தராததால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். அதன்பின், அவரை சமாதானப்படுத்தினர். மாநில  தலைவர் சஞ்சய் நிருபம், மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் ஆகியோரும்  கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்களை, துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று அழைத்து பேசினார். உள்ளாட்சி தேர்தலை  எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர். அதிருப்தியில் இருந்த குருதாஸ் காமத் உள்ளிட்டோரை சமாதானப்படுத்தினார். அதே சமயம், உள்கட்சி பூசலில்  ஈடுபடுவோர், கட்சியை பிளவுபடுத்த நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி எச்சரித்தார்.

மேலும், பாஜவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில்,  இருகட்சிகளும் தனித்தனியே உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது.  இதை பயன்படுத்தி கொண்டு அதிக இடங்களை கைப்பற்றுவதற்கு காங்கிரசார் ஒற்றுமையாக திட்டமிட வேண்டும் என ராகுல்  அறிவுரை வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று  இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.

மேலும் சில
  • இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு



  • கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை



  • பாலியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை பலாத்காரம் செய்த போலி டாக்டர் சிக்கினார்: மசாஜ் என்ற பெயரில் அத்துமீறல்



  • அஞ்சலக துறை ஏற்பாடு: வீட்டிற்கே வரும் கங்கை தீர்த்தம்



  • மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை எதிர்க்க காங்கிரசுடன் கைகோர்ப்போம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு



  • வியாபம் வழக்கு தொடர்பான உயிரிழப்புகளில் மர்மம் இல்லை: சிபிஐ முடிவு



  • பலி எண்ணிக்கை 23 ஆனது: காஷ்மீரில் அமைதி திரும்புகிறது அமர்நாத் யாத்திரை இன்றும் ரத்து; 15,000 பக்தர்கள் தவிப்பு



  • ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் கேரள இளம்பெண்ணின் தாய் முதல்வர் பினராயுடன் சந்திப்பு



  • திருமலையில் கார் மோதி சென்னை பெண் பலி



  • ரூ.7 கோடியில் நடைபெற்ற சாமியாரின் இறுதி சடங்கு



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]