திருத்தணி பகுதி மக்களுக்கு திமுக எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்
7/9/2025 1:42:15 PM
திருத்தணி, -திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி பகுதியில் உள்ள அருங்குளம், கே.ஜி.கண்டிகை, அருங்குளம் கண்டிகை, லட்சுமாபுரம், நாபளூர் ஆகிய பகுதிகளில் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று மாலை வீதி வீதியாக சென்று, அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது வி.ஜி.ராஜேந்திரன் கூறியதாவது:இப்பகுதி மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளான குடிநீர், சாலை வசதி, தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’ என்றார்.அப்போது திருவாலங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் ராேஜந்திரன், டி.கே.கோவிந்தராஜன், ஒன்றிய கவுன்சிலர் பூக்கடை கோபி, லோகநாதன், குமரவேலன், நாபளூர் குமார், யுவராஜ் உள்ளிட்ட பலர் சென்றனர்.