திருவள்ளூர் அருகே டிரைவரை கட்டிபோட்டு சொகுசு கார் கடத்தல்- 6 பேருக்கு வலைவீச்சு
7/9/2025 1:40:22 PM
திருத்தணி, -திருத்தணி அருகே டிரைவரை கட்டிப்போட்டு சொகுசு காரை கடத்திய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த காவேரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வியாபாரி மனோகரன். இவர், திருப்பதியில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமான சொகுசு காரின் டிரைவராக வினோத் பணியாற்றி வருகிறார். வினோத் நேற்று முன் தினம் மனோகரனின் உறவினர்களை சென்னையில் இருந்து ஏற்றிக் கொண்டு திருப்பதிக்கு சென்றார். அங்கிருந்து அவர்களை சென்னை மற்றும் காவேரிராஜபுரத்தில் இறக்கி விட்டு, திருவள்ளூர் அடுத்த புதூர் பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில் வினோத் மட்டும் தனியாக வந்துள்ளார். அப்போது, பின் தொடர்ந்து பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தது. பின்னர், அந்த கும்பல் வினோத்தியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை சரமாரியாக தாக்கி காரை கடத்திச்சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை அருகே வினோத்தை கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்ேபரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.