இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விழுப்புரம் லாட்ஜில் போலீஸ்காரர் மர்ம சாவு - உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமா?

7/9/2025 1:38:54 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

விழுப்புரம், -விழுப்புரம் அடுத்த வி.மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (40). திருமணமானவர். இவர் ஏற்கனவே விழுப்புரம் காவல்துறை சைபர்கிரைம் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 7ம்தேதி விழுப்புரம் புதிய  பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து வருவதாகவும், வாக்கிங் சென்று விட்டு வருகிறேன் என விடுதி ஊழியர்களிடம் கூறினாராம். பின்னர் அறை சாவியை விடுதி வரவேற்பறையில் கொடுத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

   நேற்று மதியம் 1 மணி அளவில் கையில் வாட்டர் பாட்டில், மது பாட்டில், உணவு பொட்டலம் ஆகியவற்றுடன் வந்த நாகராஜ் தனது அறைக்கு சென்று பூட்டிக்கொண்டார். ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. டிவி சத்தம் அதிகமாக கேட்டது. இன்று காலை 7 மணி அளவில் அறைக்கதவு திறக்கப்படாததால் ஊழியர் சந்திரசேகர் என்பவர் கதவை தட்டியள்ளார். ஆனால் பதில் இல்லை. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்தபோது படுக்கையில் நாகராஜ் பிணமாக கிடந்தார். அருகில் விஷபாட்டில் கிடந்தது. சிரிஞ்ச் ஒன்றும் கிடந்தது. எனவே விஷத்தை உடலிலும் செலுத்தி, குடித்தும் உள்ளதாக தெரிகிறது.

  தகவல் அறிந்ததும் தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ்காரர் நாகராஜ் இறப்புக்கு காரணம் குடும்ப பிரச்னையா? உயர் அதிகாரிகள் டார்ச்சரா? பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • மீனவர்கள், படகுகளை மீட்க வலியுறுத்தி புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்: ராமேஸ்வரத்திலும் வேலை நிறுத்தம்



  • மெரினாவில் மூழ்கி டெல்லி, ராஜஸ்தான் வாலிபர்கள் பலி



  • காமராஜர் பிறந்த நாள் விழா வடசென்னையில் மலர் அஞ்சலி : ராயபுரம் ஆர்.மனோ அறிக்கை



  • தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் திமுகவில் சேர்ந்தார்



  • வங்கிகள் நாளை ஸ்டிரைக்: பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் பாதிக்கும்



  • அதிமுக எம்பி 3வது திருமணம், மும்பை பெண்ணை மணந்தார்



  • போதை மீட்பு பிரிவு ஜி.ஹெச்.சில் துவக்க கோரிக்கை



  • சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சி



  • நாபலூர் கோயில் கும்பாபிஷேகம்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ‘புகை’: மக்கள் திணறல்



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]