இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

செங்குன்றம் அருகே பான் குட்கா குடோன்களில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு

7/9/2025 1:29:22 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

புழல், - சென்னை செங்குன்றம் அருகே தீர்த்தங்கரைப்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை மற்றும் கோட்டூர் செல்லும் சாலையில் உள்ள 2 பான் குட்கா குடோன்களிலும் இன்று 2-வது நாளாக வருமானவரி துறை அதிகாரிகளும், போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் நேற்று மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள பான்மசாலா, குட்கா நிறுவனங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ₹64 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவை அனைத்தும் முக்கிய அரசியல் பிரமுகருக்கான நிறுவனம் என்பதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அதிகாரிகளின் துணையுடன் சென்னை அருகே போதை பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அவர்கள் அரசுக்கு கணக்கு காட்டாமல், முறைகேடான வகையில் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதால், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளன. இப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் நிறுவனங்கள், இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக வருமானவரி துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால் சென்னை மண்டல வருமானவரி துறை இயக்குநர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வருமானவரி துறை அதிகாரிகள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, நேற்று காலை 8.30 மணியளவில் செங்குன்றம் அருகே தீர்த்தங்கரைப்பட்டு, சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள எம்டிஎம் என்ற பெயரில் இயங்கும் குடோனிலும், மாதவரம் அருகே மற்றொரு குடோனிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இன்று 2-வது நாளாக இந்த 2 குடோன்களிலும் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் குடோன்களையும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த குடோன்களில் நடைபெறும் சோதனையில் பிடிபட்டவை குறித்து இன்று மாலை விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.

மேலும் சில
  • மீனவர்கள், படகுகளை மீட்க வலியுறுத்தி புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்: ராமேஸ்வரத்திலும் வேலை நிறுத்தம்



  • மெரினாவில் மூழ்கி டெல்லி, ராஜஸ்தான் வாலிபர்கள் பலி



  • காமராஜர் பிறந்த நாள் விழா வடசென்னையில் மலர் அஞ்சலி : ராயபுரம் ஆர்.மனோ அறிக்கை



  • தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் திமுகவில் சேர்ந்தார்



  • வங்கிகள் நாளை ஸ்டிரைக்: பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் பாதிக்கும்



  • அதிமுக எம்பி 3வது திருமணம், மும்பை பெண்ணை மணந்தார்



  • போதை மீட்பு பிரிவு ஜி.ஹெச்.சில் துவக்க கோரிக்கை



  • சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சி



  • நாபலூர் கோயில் கும்பாபிஷேகம்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ‘புகை’: மக்கள் திணறல்



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]