இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

₹2 கோடி மோசடி வழக்கில் கணவர் கைதான அதிர்ச்சியில் மனைவி, 2 மகள்கள் தற்கொலை - சென்னையில் பரிதாபம்

7/9/2025 1:26:42 PM
இணை அமைச்சர்களுக்கு பணி ஒதுக்கும் விவகாரத்தில் மோடி தலையிட முடிவு கேரளாவில் இருந்து மேலும் 4 பேர் சிரியா பயணம் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்த கேரள வாலிபர் சிக்கினார்: மும்பையில் ரகசிய இடத்தில் விசாரணை

சென்னை, -ரூ.2 கோடி மோசடி வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த மனைவி, 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் இந்த பரிதாப சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள சேத்தியாதோப்பைச் சேர்ந்தவர் தேவராஜன் (64). மனைவி உஷா ராணி(55), மகள்கள் வாணி (29), விஜயலட்சுமி (27), மகன் சிவபாலன் (24).  தேவராஜன் இந்து அறநிலையத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு வர வேண்டிய பிடித்தம் மற்றும் ஓய்வு பணப் பலன்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால், குடும்பம் வறுமையில் இருந்தது.

மகள்கள் வாணி, விஜயலட்சுமி இருவரும் எம்ஏ, எம்பில் முடித்து விட்டு பிஎச்டி பட்டமும் பெற்றிருந்தனர். குடும்ப வறுமையால், வேலை தேடி வந்தனர். வேலை கிடைக்கவில்லை. இருவருக்கும் திருமணமாகவில்லை. மகன் சிவபாலன் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கு சரியாக பேச்சும் வராது.
 இந்தநிலையில், கடந்த 3ம் தேதி கடலூர் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கில் தேவராஜனை கைது செய்தனர். சிதம்பரத்தைச் சேர்ந்த சிலரிடம் மனோகரன் என்பவர், மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.2 கோடி வரை பணம் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை மனோகரன், தேவராஜனிடம் கொடுத்துள்ளார். தேவராஜன் மேலும் 2 பேரிடம் கொடுத்து வேலை வாங்கித் தரும்படி கூறியுள்ளார். இதற்காக தேவராஜனுக்கு கமிஷன் கிடைத்தது.ஆனால் சொன்னபடி மின்வாரியத்தில் வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இதனால் கடந்த 3ம் தேதி போலீசார் தேவராஜனை கைது செய்தனர். இதையடுத்து, ஊரில் இருந்தால் உறவினர்கள் மற்றும் பணம் கொடுத்தவர்கள் தினமும் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிப்பதுபோல வந்து கேட்டபடி இருந்தனர். இதனால் மனமுடைந்த உஷாராணி, தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் சென்னை எம்ஜிஆர் நகர் அழகிரி தெருவில் வசிக்கும் தன்னுடைய தங்கையின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் மாடியில் ஒரு அறையில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

வந்த நாள் முதல் அவர்கள் 4 பேருமே சரியாக சாப்பிடாமல் மனமுடைந்து காணப்பட்டனர். தனியாகவே இருந்தனர். யாரிடமும் பேசவில்லை. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். சரி வழக்கம்போல பேசுகிறார்கள் என்று அவரது சகோதரி நினைத்தார். இன்று காலையில் சகோதரியின் கணவர் திருநாவுக்கரசு, மாடிக்குச் சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.இதனால் எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் தேவராஜ், விரைந்து சென்று கதவை உடைந்து உள்ளே சென்றார். வீட்டினுள் உள்ள உத்திரத்தில் துப்பட்டாவால் 3 பேரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினர். போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தரையில் மனநிலை பாதிக்கப்பட்ட சிவபாலன் ஒன்றும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் எழுந்த பிறகு என்ன நடந்தது என்பதைக் கூட அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • மீனவர்கள், படகுகளை மீட்க வலியுறுத்தி புதுக்கோட்டை மீனவர்கள் ஸ்டிரைக்: ராமேஸ்வரத்திலும் வேலை நிறுத்தம்



  • மெரினாவில் மூழ்கி டெல்லி, ராஜஸ்தான் வாலிபர்கள் பலி



  • காமராஜர் பிறந்த நாள் விழா வடசென்னையில் மலர் அஞ்சலி : ராயபுரம் ஆர்.மனோ அறிக்கை



  • தென்சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் திமுகவில் சேர்ந்தார்



  • வங்கிகள் நாளை ஸ்டிரைக்: பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் பாதிக்கும்



  • அதிமுக எம்பி 3வது திருமணம், மும்பை பெண்ணை மணந்தார்



  • போதை மீட்பு பிரிவு ஜி.ஹெச்.சில் துவக்க கோரிக்கை



  • சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சி



  • நாபலூர் கோயில் கும்பாபிஷேகம்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ‘புகை’: மக்கள் திணறல்



Facebook

Twitter

விஜய் சேதுபதி படம் இயக்குனர் நழுவல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]