இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வங்க கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும் சென்னையில் விடிய, விடிய சாரல்

6/27/2016 4:29:34 PM
வெளியுறவு கொள்கையில் பாஜ அரசு தோற்றுவிட்டது ஜேடியூ குற்றச்சாட்டு பலாத்காரம் குறித்து சர்ச்சை கருத்து சல்மானிடம் ரூ. 10 கோடி கேட்டு இளம்பெண் திடீர் வழக்கு

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.  வழக்கத்துக்கு மாறாக கத்தரி தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயில் சுட்டெரித்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.  இதற்கிடையில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த மாதம் இறுதியில் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழையும், சில  இடங்களில் லேசான மழையும் பெய்தது. கடந்த 10 நாட்களாக சென்ைனயில் மழை பெய்யாவிட்டாலும், வெயிலின் அளவு  குறைந்து வெப்பம் தணியத் தொடங்கியது. இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதும்  தமிழகத்திலும் மழை பெய்யத் தொடங்கியது.

அதன்படி தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை  பெய்தது. வங்கக் கடலில் உருவான அந்த காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் அது ஆந்திர கடலோரப்பகுதிக்கு நகர்ந்து சென்றது. இதனால் ஆந்திரா, தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து  வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்றிரவு 7 மணி அளவில் தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு,  சென்ட்ரல், மந்தவெளி உள்ளிட்ட பல இடங்களில் சிறிது நேரம் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து இரவு முழுவதும்  அவ்வப்போது மழை சாரல் விழுந்தது. இதனால் சென்னையில் நேற்று முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டது.
அதிகபட்சமாக நேற்று வால்பாறையில் 23.4 மி.மீ, தளியில் 20 மிமீ, சென்னை நுங்ஙகம்பாக்கம் 10.8 மி.மீ, உதகையில் 3.4 மிமீ  மழை பெய்துள்ளது.

திருவள்ளூர், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நடுவட்டம், திருவாலங்காட்டில் 10 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வங்கக்  கடலில் உருவாகியுள்ள காற்று சுழற்சி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு  நகர்ந்து சென்றதால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில்  இன்று பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் பொதுவாக  மேகமூட்டம் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் சில
  • திமுகவில் மீண்டும் அதிரடி 3 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நாகை வடக்கு, தெற்கு, தூத்துக்குடி வடக்கிற்கு பொறுப்பாளர்கள்



  • சுவாதி கொலையை கண்டித்து பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



  • தேசிய நுழைவு தேர்வில் அதிகம் பேர் வெற்றி பெற தமிழக பாடத்திட்டம் சிபிஎஸ்இ.,க்கு இணையாக மேம்படுத்தப்பட வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்



  • கோஷ்டி தலைவர்கள் குறித்து புகார் தெரிவிக்க முடிவு இளங்கோவனுக்கு ஆதரவாக மாவட்ட தலைவர்கள் டெல்லிக்கு படையெடுப்பு



  • பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2வது நாளாக பொதுப்பிரிவு கவுன்சலிங்



  • பல்வேறு கட்சிகளில் இருந்து 12 ஆயிரம் பேர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்



  • வக்கீல்கள் சட்ட விதிகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஸ்டிரைக் வழக்கு விசாரணை பாதிப்பு



  • உயிருக்கு பாதுகாப்பு கோரி பெண் போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு



  • ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி அதிமுக கவுன்சிலர் மகன் கைது



  • சாரல் மழை பெய்வதால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது : பயணிகள் உற்சாகம்



Facebook

Twitter

கிராமத்தில் திருவிழா நடத்திய பட குழு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]