இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நாளை தொடக்கம்

6/23/2016 2:08:50 PM
சென்னையில் போலீஸ் தீவிர ரோந்து ரவுடி சிடி மணியின் 6 கூட்டாளிகள் கைது: ஆயுதங்கள், கார், பைக் பறிமுதல் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 4 வயது சிறுவன் பரிதாப பலி: உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

சென்னை: பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது. முதல்நாளில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 524 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் முதல் நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3,812 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டது. மொத்த தகுதியான விண்ணப்பங்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண்கள் 80 ஆயிரத்து 910 பேர், பெண்கள் 50 ஆயிரத்து 272 பேர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 69 ஆயிரத்து 575 பேர்.

இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. இவர்களுக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து நாளை முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  அண்ணா பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது.முதல்நாளில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு நடக்கிறது. நாளை நடக்கும் விளையாட்டு பிரிவு கலந்தாய்வுக்கு 1807 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 1519 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  25ம் தேதி மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கான கலந்தாய்வு நடக்கிறது.27ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 21ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக பல்கலை வளாகத்தில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.  கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவிகளுடன் வரும் பெற்றோர் அல்லது சகோதரிக்கு பல்கலையில் தங்கி கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 4 வயது சிறுவன் பரிதாப பலி: உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்



  • சுவாதி கொலை வழக்கில் கொலையாளியின் தெளிவான புகைப்படம் சிக்கியது



  • தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக அறிவிப்பு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் புதிய தலைவர்



  • நாளை சர்வதேச போதை ஒழிப்பு தினம் : உலகம் முழுவதும் 20 கோடி போதை அடிமைகள்



  • வாக்கிங் சென்ற 15 பேரை கடித்து குதறிய வெறிநாய்



  • கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு சேவை பாதிப்பு



  • இது கும்பகோணம் கூத்து கைதட்ட மறுத்த திமுக கவுன்சிலர்கள் அதிமுக சேர்மன் ஆத்திரம்



  • சுடுகாட்டில் பிணம் புதைத்த இடத்தை தோண்டி பூஜை தலையை எடுத்து சென்றதாக பரபரப்பு



  • பைக் மீது லாரி மோதி 2 பேர் பலி : சென்னை போலீஸ்காரர் படுகாயம்



  • திருத்தணி அருகே இரு தரப்பினர் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்



Facebook

Twitter

பாலிவுட் போகும் கோலிவுட் ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]