இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குற்றாலத்தில் களை கட்டியது சீசன் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்

6/11/2025 12:01:36 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

தென்காசி: குற்றாலத்தில் இன்று சாரல் இல்லாத நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். இந்த சீசன் காலத்தில் தண்ணீரை மெலிதாக தெளித்தது போன்று சாரல், இதமான தென்றல் காற்று, உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்று வெண்ணிறத்தில் கொட்டும் அருவிகள், மலை முழுவதும் நிறைந்து காணப்படும் பசுமையான தாவரங்கள், அவ்வப்போது வந்து செல்லும் இளம் மஞ்சள் வெயில் என அற்புதமான சுற்றுலா தலமாக குற்றாலம் விளங்குகிறது.

இதற்கு அத்தாட்சியாக ஆண்டுதோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சீசன் ெபருமளவு ஏமாற்றி விட்ட நிலையில் இந்த ஆண்டு சீசன் எதிர்பார்த்தது போன்று துவங்கிவிட்டது. கடந்த சில தினங்களாக சீசன் சூப்பராக உள்ளது.குற்றாலத்தில் நேற்று அவ்வப்போது சாரல் பெய்தது. இன்று காலையில் இதமான தென்றல் காற்று வீசியது. லேசான வெயில் காணப்படுகிறது. சாரல் இல்லை. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது.

ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் விழுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தண்ணீர் மிகவும் குறைவாக கொட்டியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிலையில் இந்த வாரம் விடுமுறை தினமான இன்று அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையில் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி விக்ரமன் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், குற்றாலத்தில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தவிர ஒரு கம்பெனி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அருவி பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். பெண்களை கேலி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.திருடர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். போலீசார் பைக் மற்றும் வேன்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அருவிகளில் இரவில் குளிப்பவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.

மேலும் சில
  • ஓசூர் சர்வேயர் கொலை வழக்கு சென்னையில் பதுங்கியுள்ள குற்றவாளி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் வாட்ஸ் அப்பில் உருக்கமான பேச்சு



  • டூவீலர்கள் மோதி விபத்து: 4 பேர் பலி



  • உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை



  • முதல்வரின் டெல்லி பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது இளங்கோவன் குற்றச்சாட்டு



  • பொது இடத்தில் புகைப்பிடித்தல் வழக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு



  • மார்ஷல் நேசமணி பிறந்த நாள் என்.ஆர்.தனபாலன் மரியாதை



  • பிரதமர்- முதல்வர் சந்திப்பில் தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



  • தமிழகத்தில் பெருகி வரும் கொலை, கொள்ளைகளை தடுக்க வேண்டும் : காங்கிரஸ் மகளிர் அணி தீர்மானம்



  • சென்னையில் வாக்ஸ் குழும நிறுவனரின் நினைவு நாள் 500 குழந்தைகளுக்கு கல்வி தொகை



  • திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் பீதி கடலுக்கு செல்லவில்லை



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]