இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆர்கே.பேட்டை அருகே கோஷ்டி மோதல் அரசு பள்ளிக்கு பூட்டு படிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு

6/10/2025 2:21:16 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே இரு தரப்பு மோதலால் அரசு பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.   திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஜனகராஜகுப்பம் ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் எம்.டி.தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 22 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் புதிதாக ஒரு தலைமை ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணிக்கு வந்தால், ஏற்கனவே  பணியாற்றும் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, மாணவர்களின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பள்ளிக்கு பூட்டு போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக ஆர்.கே.பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியை குளோரி எலிசபெத், நேற்று முன்தினம் பள்ளியின் 2 பூட்டுகளையும் உடைத்து பள்ளிக்குள் நுழைந்தார். அங்கு 2 மாணவர்களுடன் பள்ளியில் இருந்தார். நேற்று 5 மாணவர்களுடன் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்தார். ‘‘பிரச்னைக்கு தீர்வு காணும்வரை நீங்கள் பள்ளிக்கு வர கூடாது’’ என்று மாணவர்களின் பெற்றோர் கூறினர்.இதுபற்றி அறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘ பழைய மேலாளர் நியமித்த தலைமை ஆசிரியைதான் பள்ளிக்கு வர வேண்டும். புதிய மேலாளர் நியமித்த தலைமை ஆசிரியையை அனுமதிக்க கூடாது. பழைய மேலாளரும் புதிய மேலாளரும் பேசி தீர்வு காண வேண்டும்’’ என்று பொதுமக்கள் கூறினர். அவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ‘‘மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின்படி பள்ளி திறக்கட்டும். அதன்பிறகு பிரச்னையை பேசி தீர்த்து கொள்ளலாம்’’ என்றார். ஆனால், பழைய மேலாளர், பள்ளியை பூட்டிச்சென்றார்.

இதையடுத்து ஆர்.கே.பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கன் சம்பவ இடத்துக்கு வந்து, ‘‘ஏற்கெனவே பதனநகரத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் மற்றொரு பள்ளி கட்டிடத்தில் வகுப்பு நடைபெறும்’’ என கூறி விட்டு சென்றார். இதையடுத்து அங்கு சென்று, அந்த பள்ளியை இன்று திறக்க சென்றபோது, அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 5வது நாளாக பள்ளிகள் திறக்கப்படாதால் மாணவர்கள், பெற்றோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
    

மேலும் சில
  • திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சுற்றிய ஆவடி மாணவர் மீட்பு



  • ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி சுருட்டப்பள்ளி அணையிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு நீர் திறப்பு



  • வாலாஜாபாத் தாலுகாவில் விபத்துகளை தடுக்க தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் வலியுறுத்தல்



  • தக்காளி விலை கிடு கிடு உயர்வு



  • திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் ஏலம்: பின்வாங்கிய வியாபாரிகள்



  • தாம்பரம் தாலுகாவில் புரோக்கர்களின் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் புகார்



  • கிணற்றில் மூழ்கி சென்னை ஐடிஐ மாணவர் தம்பியுடன் பலி



  • நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி ஊழியர்கள் ஓட்டம்



  • தஞ்சை தேர்தல் ரத்து விவகாரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக மோதல்



  • கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]