இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஷோ ரூமில் திருடப்பட்ட 7வது கார் மீட்பு டிராவல்ஸ் உரிமையாளருக்கு வலைவீச்சு

6/10/2025 2:19:30 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் திருட்டுப்போன 7வது புதிய காரையும் போலீசார் மீட்டுள்ளனர். இதுசம்பந்தமாக டிராவல்ஸ் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.சென்னை அருகே மணப்பாக்கத்தில் 7 புதிய சொகுசு கார்கள் திருடு போன விவகாரத்தில் மதுரவாயலில் நேற்று காலை ஒரு காரை போலீசார் மீட்டனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கோடம்பாக்கம் மேம்பாலம் அடியில் ஒரு சொகுசு கார் அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அது, மணப்பாக்கத்தில் திருட்டுப்போன கார் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக நந்தம்பாக்கம் போலீசார் சென்று, மேம்பாலத்தின்கீழ் நின்றிருந்த 7வது புதிய காரை மீட்டனர். பின்னர் அந்த காரை, நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த 7 கார்கள் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட வளசரவாக்கத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில், ரமேஷ் ஆகியோரை பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.அத்துடன் கார் கடத்தல் கும்பலை வலைவீசி பிடிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் கல்யாண் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கார்  கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.இதற்கிடையில், கார் கொள்ளை சம்பவம் குறித்து 10க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். கார் திருட்டு கும்பல் சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில்தான் உள்ளனர் என தெரியவந்துள்ளது.‘’ கார் கடத்தல் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்’’ என்று தனிப்படை போலீசார் கூறினர்.

மேலும் சில
  • காவிரி, வெண்ணாற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகள் பறிமுதல்



  • பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்கொலை மேஸ்திரி கைது



  • வேலை வாங்கித்தருவதாக மோசடி போலி உதவி கலெக்டர் கைது



  • கொடைக்கானல் நீர்வீழ்ச்சியில் சிறுமியுடன் செல்பி; 12 பேர் கைது



  • தந்தை அடித்துக்கொலை மகன் உட்பட 2 பேர் கைது



  • பீகாரில் மதிப்பெண் பட்டியலில் மோசடி பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது



  • தந்தையை கொலை செய்த வழக்கு காதலனுடன் மகள் சரண்



  • சென்னையில் நடந்த முடி மாற்று சிகிச்சையில் பலியான திருச்சி டாக்டரின் உடல் மறு பரிசோதனை முக்கிய உறுப்புகள் ஆய்வுக்கு செல்கின்றன



  • ராயபுரம் அடகு கடையில் கத்திமுனையில் ரூ. 50 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்தது வடமாநில வாலிபர்கள்? 3 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை



  • மது விருந்து தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை 2 பேர் கைது



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]