இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நம்பிக்கை ஓட்டெடுப்பில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ், பாஜ எம்எல்ஏ பதவி பறிப்பு உத்தரகண்ட் சபாநாயகர் அதிரடி

6/10/2025 2:16:48 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

டேராடூன்: உத்தரகண்டில் காங்கிரஸ் மற்றும் பாஜ எம்எல்ஏக்கள் 2 பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.உத்தரகண்டில் முதல்வர் ஹரீஷ் ராவத் அரசுக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஹரீஷ் ராவத் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி மாறி வாக்களித்த இரண்டு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் உத்தரவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜ எம்எல்ஏ பீம்லால் ஆர்யா  காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ ரேகா ஆர்யா பாஜவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.ஏற்கனவே காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் காங்கிரசின் பலம் 23 ஆக குறைந்திருந்தது. இந்த சூழலில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி மாறி வாக்களித்த மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் உத்தரகண்ட் அவையின் மொத்த எண்ணிக்கை 60 ஆக குறைந்துள்ளது. ரேகா ஆர்யா காங்கிரஸ் கொறாடா உத்தரவை மீறி வாக்களித்ததன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பாஜ எம்எல்ஏ பீம் லால் ஆர்யா ஏற்கனவே காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுவதாக சபாநாயகரிடம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பாஜ புகார் தெரிவித்திருந்தது. அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாஜ கோரியிருந்தது. இருப்பினும் தற்போது தான் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • போர்கப்பலில் விஷவாயு கசிந்து இரண்டு வீரர்கள் பலி: கர்நாடகாவில் பரபரப்பு



  • காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாக். ரூ. 200 கோடி நிதி உதவி



  • தெலங்கானாவில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு பிரியர்கள் ஆய்வில் தகவல்



  • அரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை பாஜ அரசு அதிரடி



  • வருகிற 21ம் தேதியன்று யோகா தின நிகழ்ச்சியில் 30 ஆயிரம் ராணுவத்தினர் பங்கேற்பு



  • மத்திய அரசு, கவர்னர் மீது ஜனாதிபதியிடம் கெஜ்ரிவால் புகார்



  • மதிய உணவு சாப்பிட்ட 50 போலீசாருக்கு வாந்தி, மயக்கம் குஜராத்தில் பரபரப்பு



  • மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது



  • 7 மாநிலங்களில் 27 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவு : கர்நாடகா, உ.பி.யில் கடும் போட்டி



  • 5 நாடுகள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]