இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

22ல் தரவரிசை பட்டியல் வெளியீடு இன்ஜினியரிங் கவுன்சலிங் ஜூன் 24ல் தொடக்கம் அண்ணா பல்கலை அறிவிப்பு

6/9/2025 4:10:04 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

சென்னை: பிஇ, பி.டெக் உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 24ம் தேதி தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 538 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சம் அரசு இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 4ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. 2 லட்சத்து 53,113 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். அதில் 1 லட்சத்து 84,839 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். இறுதியாக 1 லட்சத்து 34,722 மாணவர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 அதன்படி முதற்கட்டமாக வரும் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அடுத்து, 22ம் தேதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணாப்பல்கலை வெளியிடுகிறது. முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அதன்படி 24ம் தேதி விளையாட்டு ஒதுக்கீட்டில்  கவுன்சலிங் நடக்கும். தொடர்ந்து 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சலிங் நடைபெறும்.

27ம் தேதி முதல் பொதுப்பிரிவு கவுன்சலிங் நடைபெறுவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கவுன்சலிங் அழைப்பு கடிதத்தை மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தனது டிஎன்இஏ 2016 பதிவு எண், பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆண்டு கவுன்சலிங்கிற்கு வரும் மாணவிகளுக்கு இரவில் தங்கும் விடுதி வசதியை அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மாணவிகள் தனது தாயார் அல்லது சகோதரியுடன் கவுன்சலிங்கிற்கு வந்தால் இரவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் தங்கி கொள்ளலாம். மாணவிகளுக்கு தங்கும் விடுதி வசதி செய்து கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் சில
  • திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சுற்றிய ஆவடி மாணவர் மீட்பு



  • ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி சுருட்டப்பள்ளி அணையிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு நீர் திறப்பு



  • வாலாஜாபாத் தாலுகாவில் விபத்துகளை தடுக்க தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் வலியுறுத்தல்



  • தக்காளி விலை கிடு கிடு உயர்வு



  • திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் ஏலம்: பின்வாங்கிய வியாபாரிகள்



  • தாம்பரம் தாலுகாவில் புரோக்கர்களின் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் புகார்



  • கிணற்றில் மூழ்கி சென்னை ஐடிஐ மாணவர் தம்பியுடன் பலி



  • நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி ஊழியர்கள் ஓட்டம்



  • தஞ்சை தேர்தல் ரத்து விவகாரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக மோதல்



  • கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]