செல்போன் பறித்த வாலிபர் கைது
6/9/2025 4:07:56 PM
துரைப்பாக்கம்: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் விஜிபி லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் மணவாரி மவுரியா (34). நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். பின்னால் வந்தவர், மணவாரி மவுரியாவின் செல்போனை பறித்து ஓடினார். உடனே பொதுமக்கள் ஓடிச்சென்று, அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை பரத் (25) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.