இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் கோல் மழை கோடின்ஹோ ஹாட்ரிக்

6/9/2025 2:38:48 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

ஓர்லாண்டோ: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், ஓர்லாண்டோ நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு நடந்த போட்டியில், பிரேசில்-ஹைதி அணிகள் மோதின. ஆட்டம் துவங்கியது முதலே பிரேசில் அணி கோல் மழை பொழிய துவங்கியது. 14வது, 28வது நிமிடங்களில் பிரேசில் அணியின் கோடின்ஹோ கோல் அடித்தார். 35வது நிமிடத்தில் ஆகஸ்டோ ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் பிரேசிலின் ஆதிக்கமே தொடர்ந்தது. 59வது நிமிடத்தில் பிரேசிலின் கேப்ரியல் ஒரு கோல் அடித்தார். 90 நிமிடங்கள் முடிந்ததும், கூடுதலாக 2 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. அதிலும் கோடின்ஹோ ஒரு கோலை அடித்து, ஹாட்டரிக்கை பதிவு செய்தார். முடிவில் பிரேசில் 7-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஹைதி அணிக்கு 70வது நிமிடத்தில் மார்சிலின் மட்டும் ஆறுதல் கோல் அடித்தார். தனது முதல் ஆட்டத்தில் ஈக்வாடரிடம் கோல்களின்றி டிரா கண்டிருந்த பிரேசில், பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹைதி அணி தனது முதல் ஆட்டத்தில் பெருவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்து இருந்தது. தற்போது 2வது தோல்வியை பெற்றுள்ளது.

மேலும் சில
  • யூரோ கோப்பை கால்பந்து தொடங்கியது ருமேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்



  • இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இலங்கை அணி பதிலடி



  • வழிநெடுகிலும் ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி உடல் அடக்கம்



  • யூரோ கோப்பை இன்று துவக்கம் ஜெர்மனி அணிக்கு விராட் கோஹ்லி ஆதரவு



  • கோபா அமெரிக்கா கால்பந்து உருகுவேக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது வெனிசுலா காலிறுதிக்கு முன்னேற்றம்



  • இலங்கையுடன் கடைசி டெஸ்ட் போர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி 279/6



  • விம்பிள்டன் டென்னிஸ் ரபேல் நடால் விலகல்



  • பிரசாத், சந்துவும் விண்ணப்பம் இந்திய அணியின் பயிற்சியாளா் பதவிக்கு கடும் போட்டி ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு



  • நாளை இறுதி சடங்கு முகமது அலி சொந்த ஊரில் ரசிகர்கள் குவிந்தனர் 1 மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது



  • உலக சாம்பியனை வீழ்த்தி அபாரம் 47 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]