இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மடோனாவுக்கு சிபாரிசு செய்த விஜய் சேதுபதி

6/9/2025 2:37:00 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் கதை கார்ப்பரேட் நிறுவனங்களை சுற்றி நடக்கிறது. நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். நிறுவனங்களுக்கான ஏஜென்ட் வேடத்தில் டி.ராஜேந்தர் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் வேடத்துக்கு பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. கதைக்கு துருதுருவென இருக்கும் ஹீரோயின்தான் தேவை என இயக்குனர் ஆனந்த் விரும்பினார். இதனால் நிக்கி கல்ராணி இந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என பலரும் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில் பட ஹீரோயினாக மடோனா செபஸ்டின் தேர்வாகியுள்ளார்.

இவர் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தவர். மலையாளத்தில் நடித்துள்ள இவர், காதலும் கடந்து போகும் படம் மூலம்தான் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில் ஆனந்த் படத்தில் அவர் நடிக்க விஜய் சேதுபதிதான் காரணம் என கிசு கிசு கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. ‘நம்ம படத்துக்கு மடோனாதான் சூட்டா இருப்பா’ என விஜய் சேதுபதி ஆனந்திடம் சொன்னதாக கூறப்படுகிறது. காதலும் கடந்து போகும் படம் பார்த்த ஆனந்தும் மடோனா நடிப்பை பார்த்து திருப்தி அடைந்தாராம். இதையடுத்து அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.ஏற்கனவே ஒரு சில படங்களில் நடிக்க ஐஸ்வர்யாவை விஜய் சேதுபதி சிபாரிசு செய்ததாக கிசு கிசு கிளம்பியது. அதேபோல் தொடர்ந்து பல படங்களில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா நடித்தார். இப்போது அதேபோல் மடோனாவுக்கும் அவர் சிபாரிசு செய்திருப்பதாக கோலிவுட்டில் முணு முணுக்கிறார்கள்.

மேலும் சில
  • உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்



  • இயக்குனருக்கு உடல் நலம் பாதிப்பு திடீர் டைரக்டர் ஆனார் கமல்



  • குணச்சித்திர வேடம் சூரி விருப்பம்



  • நம்பர் ரொம்ப முக்கியம் ஜெயம் ரவி பேட்டி



  • சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து ஷகிலா கதை படமாகிறது .



  • ஹாலிவுட் டான்ஸ் மாஸ்டருடன் பணியாற்றும் ஸ்ருதி



  • ஹிரித்திக் கைவிட்டதால் இளம் ஹீரோவுடன் கங்கனா காதல்?



  • தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம் டிராப்?



  • குதிரையேற்ற பயிற்சியின்போது தமன்னாவுடன் ராணா நெருக்கம்



  • படம் தயாரித்து நடிப்பது ஏன்? அருண்விஜய் விளக்கம்



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]