தமிழ் படம் பார்த்து மஞ்சு வாரியர் கண்ணீர்
6/9/2025 2:36:33 PM
சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘அப்பா’. கேன்சர் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த மஞ்சுவாரியர் தனது தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதை எண்ணி கண்ணீர் மல்க கூறியது:கன்னியாகுமரியில்தான் நான் வளர்ந்தேன். எனது தந்தையுடன் அங்கு வாழ்ந்த காலத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. எங்களை சந்தோஷமாக வைத்திருப்பதற்காக தனது சோகத்தை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொள்வார். பலருக்கு மரம்போல் நிழல் தந்தவர். அவருக்கு கேன்சர் தாக்கி இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தோம். அதையும் அவர் தைரியமாக எதிர்கொண்டார். கடினமான நேரங்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். என் வாழ்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அவர் எனக்கு பக்கபலமாக இருப்பார். அவரது அன்பும் பாசமும்தான் எனக்கு பெரிய பலத்தை தந்தது.இவ்வாறு மஞ்சு வாரியர் கூறினார்.