இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு

6/9/2025 2:13:39 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது


பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், சக்கரை நோய், இதய நோய், சித்து மருத்துவம், மகப்பேறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு, காட்டூர், திருப்பாலைவனம், கவரப்பேட்டை, பெருவாயல், தச்சூர் கூட்டு சாலை, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரியாக இருந்த நாகேந்திர பிரசாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பதவிக்கு, இதே மருத்துவமனை மருத்துவர் ஸ்டாலின் பிரகாரன் நியமிக்கப்பட்டார்.

அதற்கு பிறகு, புறநோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக பெண் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட சுகாதார துறை அதிகாரிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர், ஒரு பல் மருத்துவர், 2 பொதுநல மருத்துவர் என 4 பேர்தான் உள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். மருந்து கிடங்கு, உணவகம், பிரேத பரிசோதனை அறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் சென்று பார்வையிட்டார். அப்போது, அவரிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சரமாரி புகார் அளித்தனர். புகாரை பெற்ற கோகனன், உயரதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் சில
  • ஆர்.கே.பேட்டை அருகே உடைந்து விழும் நிலையில் அரசு பள்ளி



  • ஒரகடம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்கள் அதிகரிப்பு



  • திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு



  • விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்



  • 100 வயதை எட்டிய தியாகி



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு



  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]