இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஓசூர் சர்வேயர் கொலை வழக்கு கூலிப்படை கும்பல் தலைவன் சிக்கினார் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

6/9/2025 2:10:02 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

சேலம்: ஓசூர் சர்வேயர் கொலை வழக்கில் கூலிப்படை கும்பல் தலைவன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி சர்வேயர் குவளை செழியனை (42), கடந்த 27ம் தேதி மர்மகும்பல் கடத்தியது. அவரது மனைவி ரேவதியிடம் ரூ.50லட்சம் பணம் கொடுத்தால் விடுவிப்பதாக அக்கும்பல் மிரட்டியது. இதனிடையே மறுநாள், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்திநகரில் காரில் எரிந்த நிலையில் சர்வேயர் குவளை செழியன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் சர்வேயர் குவளை செழியன் கடத்தி கொலைச் செய்யப் பட்டிருப்பது தெரிந்தது. ஓசூரை சேர்ந்த கள்ளக்காதலி கார்த்தியாயினி, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கூலிப்படையினர் 7 பேர் என மொத்தமாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இக்கொலையில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த இக்ரமுல்லா, ஓமலூர் கோட்டக்கவுண்டம் பட்டியை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் கலைவாணன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். டிஎஸ்பி திருமால் அழகு தலைமையிலான தனிப்படையினர், இக்ரமுல்லாவையும், கலைவாணனையும் பிடிக்க சென்னை, கோவை, டெல்லிக்கு விரைந்துச் சென்றனர்.ஆங்காங்கே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தநிலையில், கூலிப்படை கும்பல் தலைவன் கலைவாணன் போலீஸ் பிடியில் சிக்கினார். இவர், மக்கள் தேசம் கட்சியின் மண்டல இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார். பிடிப்பட்ட கலைவாணனிடம் போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இக்ரமுல்லாவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது?, சர்வேயரை கடத்திக் கொலை செய்ய காரணம் என்ன?, கூலிப்படையாக செயல்பட பணம் எவ்வளவு பெறப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முக்கிய குற்றவாளி இக்ரமுல்லாவை தேடி வரும்நிலையில், கிச்சிப்பாளைத்தை சேர்ந்த கூலிப்படைக்கு தலைவனாக செயல்பட்ட கலைவாணன் போலீசில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • காவிரி, வெண்ணாற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகள் பறிமுதல்



  • பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்கொலை மேஸ்திரி கைது



  • வேலை வாங்கித்தருவதாக மோசடி போலி உதவி கலெக்டர் கைது



  • கொடைக்கானல் நீர்வீழ்ச்சியில் சிறுமியுடன் செல்பி; 12 பேர் கைது



  • தந்தை அடித்துக்கொலை மகன் உட்பட 2 பேர் கைது



  • பீகாரில் மதிப்பெண் பட்டியலில் மோசடி பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது



  • தந்தையை கொலை செய்த வழக்கு காதலனுடன் மகள் சரண்



  • சென்னையில் நடந்த முடி மாற்று சிகிச்சையில் பலியான திருச்சி டாக்டரின் உடல் மறு பரிசோதனை முக்கிய உறுப்புகள் ஆய்வுக்கு செல்கின்றன



  • ராயபுரம் அடகு கடையில் கத்திமுனையில் ரூ. 50 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்தது வடமாநில வாலிபர்கள்? 3 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை



  • மது விருந்து தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை 2 பேர் கைது



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]