இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இறுதி சடங்கு ஏற்பாடுகள் தீவிரம் முகமது அலி எப்போதும் லூயிஸ்வில்லியன் நகர மேயர் உருக்கம்

6/8/2025 2:45:24 PM
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி நடக்க இருந்த வேலூர், சென்னை பேரணிக்கு போலீஸ் தடை பதற்றம்; போலீஸ் குவிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

லூயிஸ்வில்லி:  குத்துச்சண்டை உலகின் ஜாம்பவானான அமெரிக்காவை சேர்ந்த முகமது அலி, பீனிக்ஸ் நகர மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி காலமானார்.இதையடுத்து கென்டகி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லி நகருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. முகமது அலியின் இறுதி சடங்கு நாளை மறு நாள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை லூயிஸ்வில்லி நகர நிர்வாகமும், போலீசாரும் தீவிரமாக செய்து வருகின்றனர்.இதன்படி முகமது அலியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் வழித்தடங்கள், அந்த நேரத்தில் மூடப்படும் சாலைகள், வாகன பார்க்கிங் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை எனவும், அதற்கு பதிலாக அவரது உயர்மட்ட ஆலோசகர் வலிரியா ஜேரெட் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது அலியின் மனைவி லூனியிடம், ஒபாமா தொலைபேசியில் பேசி, இரங்கல் தெரிவித்தார். இறுதி சடங்கு குறித்து லூயிஸ்வில்லி நகர மேயர் பிஸ்ஸர் கூறுகையில்,

இந்த உலகம் லூயிஸ்வில்லி நகரை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இந்த உலகமே எங்களது நகருக்கு வரவுள்ளது. முகமது அலியின் இறுதி சடங்கில் பங்கேற்க இங்கு வரவுள்ள தேச, சர்வதேச முக்கிய பிரமுகர்கள், தலைவர்களை வரவேற்கிறோம். முகமது அலி எப்போதும் லூயிஸ்வில்லியன்தான். லூயிஸ்வில்லியில் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என முகமது அலி விரும்பினார் என்றார்.இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதவர்களுக்காக, இந்நிகழ்ச்சிகள் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அங்கு வருகை தர உள்ள பொது மக்களுக்கு உதவி செய்வதற்காக, 1000க்கும் ேமற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஐ யம் அலி என்ற வாசகத்துடன் கூடிய ஆரஞ்ச் மற்றும் கருப்பு நிற டி-சர்ட்டுகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்.

மேலும் சில
  • யூரோ கோப்பை கால்பந்து தொடங்கியது ருமேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்



  • இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இலங்கை அணி பதிலடி



  • வழிநெடுகிலும் ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி உடல் அடக்கம்



  • யூரோ கோப்பை இன்று துவக்கம் ஜெர்மனி அணிக்கு விராட் கோஹ்லி ஆதரவு



  • கோபா அமெரிக்கா கால்பந்து உருகுவேக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது வெனிசுலா காலிறுதிக்கு முன்னேற்றம்



  • இலங்கையுடன் கடைசி டெஸ்ட் போர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி 279/6



  • விம்பிள்டன் டென்னிஸ் ரபேல் நடால் விலகல்



  • பிரசாத், சந்துவும் விண்ணப்பம் இந்திய அணியின் பயிற்சியாளா் பதவிக்கு கடும் போட்டி ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு



  • கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் கோல் மழை கோடின்ஹோ ஹாட்ரிக்



  • நாளை இறுதி சடங்கு முகமது அலி சொந்த ஊரில் ரசிகர்கள் குவிந்தனர் 1 மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]